பயணங்கள் முடிவதாக இல்லை
(முதல் முறையாக தமிழில் டைப் செய்ய போறேன்.. பிழ இருந்தால் மன்னிக்கவும்.. ஐய்யகோ பிழை என்ற வார்த்தையிலேயே பிழை செய்து விட்டேனே!! சரி ஆனது ஆய் போச்சு.. மேற்கொண்டு படியுங்கள்)
(முதல் முறையாக தமிழில் டைப் செய்ய போறேன்.. பிழ இருந்தால் மன்னிக்கவும்.. ஐய்யகோ பிழை என்ற வார்த்தையிலேயே பிழை செய்து விட்டேனே!! சரி ஆனது ஆய் போச்சு.. மேற்கொண்டு படியுங்கள்)
ரெண்டு BLOGக்கு முன்னாடி.. நான் காஞ்சிபுரம் போய் சேர்ந்த கதைய சொல்லி இருந்தேன்.. இப்போ பொங்கல் முடிச்சிட்டு காஞ்சிபுரத்தில் இருந்து return ஆன கதை.. infact..அப்பட்டமான அப்பழுகற்ற Hamam Soap போன்ற நேர்மையான உண்மை....
பஸ் கிளம்பி கொஞ்சம் தூரம் போற வரைக்கும் எல்லாம் ஒழுங்கா இருந்தது...என் கூட வந்த பாதி பேர் மேல college students.. பயங்கர கலாட்டா.. நல்லா jollya இருந்தது.. அவங்க போட்ட கடலைல பஸ்ல எல்லாருக்குமே stomach upset..அந்த கும்பல்ல ஒரு பொண்ணு.. என்னோட ஸீட்க்கு அந்த பக்கம்.. மத்தவங்க கூப்புடுறத வெச்சி அந்த பொண்ணோட பெயர் சந்திரா னு தெரிஞ்சி கிட்டேன்.. எல்லாரும் கண்ணுல மை வெப்பாங்க..அந்த பொண்ணு மட்டும்..மை டப்பாக்குள்ள கண்ண நல்லா உருட்டி பெரட்டி வந்துடுச்சி...எல்லாரும் அவள "மை" டியர் சந்திரா னு கூப்பிட ஆரம்பிச்சாங்கன்னா பாத்துகோங்களேன்..அந்த பொண்ணுக்கு சந்திரானு பேர் வெக்குறத்துக்கு பதிலா சந்திராமுகினு வெச்சி இருக்கலாம்... கச்சிதமா பொருந்தி இருக்கும்... என்னோட ஸீட் கடைசியில் இருந்து மூணாவது row.. அந்த கலாட்டால யாருமே பஸ்ல உட்கார்ந்து வரல.. ஒரு மணி நேரம் கழிச்சி ஒவ்வொருதரா tired ஆயி அவங்க அவங்க ஸீட்ல உட்கார ஆரம்பிச்சாங்க..பஸ்ல என் பக்கத்துல இன்னொரு பஸ் வந்து உட்கார்ந்தது.. எனக்குனு இருந்த பாதி ஸீட்ல நல்லா சந்தோஷமா தூங்கலாம்னு நெனைசா..அந்த நெனைப்புல இடியுடன் கூடிய மழை பெய்தது..
என்னோட ஸீட் பக்கத்துல இருந்த Levera TATA Sierra கார்ல gear போடுற மாதிரி எல்லா Angle லேயும் திருப்பி பார்த்தேன்...ஹூம் ஹூம்... கை மட்டும் தான் எல்லா direction லேயும் போச்சு.. Push Back ஸீட் மட்டும் அப்படியே VGP Golden Beachல வர்ர சிரிக்காத ஆள் மாதிரி அப்படியே எந்த விதமான Reactionum இல்லாம இருந்தது...சரி..ஏற்கெனவே நின்னுகிட்டு தூங்கி இருக்குற எனக்கு இப்படி தூங்குறதுல பிரச்சனை இல்லைனு ஒரு அசட்டு நம்பிக்கைல தூங்க ஆரம்பிச்சேன்.. அப்போன்னு பாத்து Saddam Hussain ku ஒரு George Bush மாதிரி..எனக்குன்னு ஒரு ஜந்து எழுந்து நின்னு அந்த பஸ் conductor கிட்ட "சந்திரமுகி" DVD குடுத்து போட சொன்னான்.. அதோட இல்லாம full volumela வேற வெக்க சொன்னான்....அதுக்கு ஆமோதிக்குற மாதிரி எல்லாரும் மண்டைய மண்டைய ஆட்டினாங்க.. அட பாவமே என் முன்னாடி ஒரு சந்திரமுகி..என்னோட சைடுல இன்னொரு சந்திரமுகி...பயத்தால வந்த குளிருல பல் type அடிக்க ஆரம்பிச்சிது.. கொஞ்ச நேரம் அப்பறம் type மட்டும் இல்லாம type அடிச்சி..Print Out எடுத்து Xerox Copy எல்லாம் எடுக்க ஆரம்பிச்சிது..
சரி..ஆயிரம் தடைகள் வந்தாலும் நாம எப்படியாவது தூங்கிடலாம்னு முடிவு பண்ணி கண்ண இருக்கமா மூடிகிட்டேன்..படமும் ஆரம்பித்தது.. படத்துல வடிவேலு வர்ர வரைக்கும் கொஞ்சம் தூங்கினேன்... வடிவேலு வந்ததுக்கப்பறம் என் பக்கத்துல இருந்த இன்னொரு பஸ் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தது...ஓடுற Grinderல மாட்டிகிட்ட எலி மாதிரி சத்தம் வேற..அந்த size வெச்சி குலிங்கின குலுங்கல்ல பஸ் ஊஞ்சல் மாதிரி முன்னாடி பின்னாடி போக ஆரம்பிச்சது.. எனக்கு அடுத்த ரெண்டு நாளைக்கு தூக்கம் கோவிந்தா...
மணி 3:30 AM ஒரு வழியா பெங்களூர் வந்தது... நானும் இறங்கி ஆட்டோ பிடிச்சி வீட்டுக்கு போய் சேந்தேன்.. முதல் மாடில இருக்குற வீட்டுக்கு போக படி ஏற ஆரம்பிச்சா... அங்க நாய் ரூபத்துல ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சி...எங்க பக்கத்து வீட்டு கருப்பு நாய் படில "எல்லை சாமி" மாதிரி காவல் காத்துகிட்டு இருந்துச்சி..அது என்னையே படி ஏற விடல.. "உன்னோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லயா?" அப்படினு விவேக் ஸ்டைல மனசுகுள்ள கேட்டுக்கிட்டேன்..நானும் எவ்வளவோ விதத்துல அத அங்க இருந்து துரத்த முயற்சி செய்து பாத்துட்டேன்..அது Fevicol கம்பெனில வேல செய்யிற நாய் மாதிரி நின்ன இடத்த விட்டு ஒரு சின்ன இன்ச் கூட நகருல..சாதாரணமா "குறைக்கிற நாய் கடிக்காது"னு சொல்லுவாங்க.. இந்த நாய் குறைக்கவே இல்ல.. அந்த விஷயம் வேற நடு மண்டைய குடைஞ்சிக்கிட்டே இருந்துச்சி....வாழ்க்கைல நான் நடு ராத்திரி மூண்ற மணிக்கு இவ்ளோ யோசிச்சது இல்ல... அப்புறம் என்னோட "Analytically Logical Thinking" use பண்ணி நான் வீட்டுலேர்ந்து கொண்டு வந்த தட்டை,சீடை எல்லாம் அதுக்கு போட்டு "friendship" build பண்ணலாம்னு அதையெல்லாம் தூக்கி போட்டேன்.. அதுக்கு அந்த நாய் என்னை ஒரு கேவலமான ஒரு ஜந்துவ பாக்குற மாதிரி பாத்துச்சி...இவ்வளவு நேரம் நின்னுகிட்டு இருந்த அந்த நாய்.. நல்லா சௌகரியமா உக்காந்துச்சி..அப்போதான் என்னோட மூளை வன்முறைல யோசிக்க தொடங்கியது.. வீட்டுக்கு உள்ள தூங்கிகிட்டு இருந்த என்னோட Room Matea எழுப்பி அந்த நாய்க்கு Double Side Attack பண்ணலாம்னு நெனைச்சா அது எங்க ரெண்டு பேரையும் கிரிக்கெட்ல Duck Out ஆயிட்டு வந்த Kaif, Raina வை பாக்குற மாதிரி கேவலமா பாத்துச்சி... செய்வது அறியாமல் இருந்த என்னை ஒரு பெண் நாய் காப்பாதுச்சி.. தெரு முனைல ஒரு விதமான Sound விட்ட அந்த நாயின் குரலை கேட்டதும்..பிரிந்த காதலர்கள் ஒண்ணு சேருவது மாதிரி Slow Motion ல இந்த நாயும் ஓடி போயிடிச்சி..
ஆஹா ரெண்டு பசங்களால செய்ய முடியாததை ஒரு பெண் நாய் ஒரு சின்ன Sound மூலம் செஞ்சதை பாத்து இயற்கையின் அமைப்பை கண்டு பெருமை பட்டுக்கொண்டு அன்று முதல் முறையாக தூங்கினேன்..